Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Tuesday, 18 February 2014



காலப்பயணம் -ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)

---------------------------------------------------------------------



பொறுமையாக படித்து பாருங்கள் ..........



Right in the centre of the Milky Way, 26,000 light years from us, lies the heaviest object in the galaxy. It is a supermassive black hole containing the mass of four million suns crushed down into a single point by its own gravity. The closer you get to the black hole, the stronger the gravity. Get really close and not even light can escape. A black hole like this one has a dramatic e‑ffect on time, slowing it down far more than anything else in the galaxy. That makes it a natural time machine – Stephen Hawking




காலப்பயணம் சாத்தியமா என்று விளக்கும் அவரது கட்டுரை ஒன்றில் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லியிருப்பதுதான் மேலே இருக்கும் மேற்கோள். பலப்பல ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் தவறாமல் இடம்பெறுவது இந்த காலப்பயணம் என்ற வஸ்து. வேறொரு காலத்தில் மூக்கை நுழைப்பது என்பது மனிதனின் ஆழ்மன ஆசைகளில் ஒன்று. எக்கச்சக்கமான வேலைகளை செய்யலாம் என்பதே காரணம். போதாக்குறைக்கு திரைப்படங்கள் இந்த ஆசையை நன்றாகவே தூண்டிவிட்டிருக்கின்றன. ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் கற்பனையானது என்பது சராசரி மனிதர்களாகிய நமக்கே தெரிந்திருக்கும்போது, ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் ஏன் அவ்வப்போது எதையாவது இப்படிப் பேசி நம் ஆசையைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்?



காரணம் இருக்கிறது. அதற்கு முன்னர், காலப்பயணத்துக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் இன்னொரு வஸ்துவையும் பார்க்கவேண்டும். அதுதான் Wormhole.



மிக மிக எளிமையாக சொல்லப்போனால், நாம் தற்போது நம் ஊரில் அமர்ந்துகொண்டு கணினித் திரையை நோக்கியவாறே எதையாவது நோண்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது திடீரென நமக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. ‘இன்னும் அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவில் வந்து முதலில் என்னைச் சந்திப்பவர்களுக்கு 500 கோடி அளிக்கப்படும்’ என்று பில் கேட்ஸ் அறிவித்திருக்கிறார். இது முற்றிலும் நம்பகமான உண்மை என்று வைத்துக்கொள்ளலாம். எப்படி அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவுக்குச் செல்வது?



இருக்கும் இடத்தை விட்டு எழுகிறோம். ஜாலியாக நமது அறையில் இருக்கும் ஒரு கதவைத் திறக்கிறோம். கதவின் மறுபக்கத்தில் அன்டார்ட்டிகா. தொலைவில் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு பில் கேட்ஸ் நிற்கிறார். அடுத்த நிமிடம் நம் கையில் 500 கோடி. இதுதான் Wormhole. இரண்டு இடங்களை இணைக்கும் ஒருவித பாலம் போன்ற அமைப்பு. அந்த இரண்டு இடங்களுக்கும் இடையே இருக்கும் தூரம், மனித மனதால் கற்பனையே செய்யமுடியாத ஒரு மிகப்பெரிய தூரமாகவும் இருக்கலாம்.



இது சாத்தியமா?



அவசியம் சாத்தியம்தான் என்பதுதான் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், தற்போதுகூட நம்மைச் சுற்றிலும் எக்கச்சக்கமான wormholeகள் உள்ளன என்று சொல்கிறார் ஹாக்கிங். அப்படியென்றால் எளிதில் இதுபோன்று எங்குவேண்டுமானாலும் செல்லலாமே? அங்குதான் கதையில் ட்விஸ்ட். தற்போது இருக்கும் wormholeகள் அளவில் மிக மிகச் சிறியவை. எந்த அளவு என்றால், ஒரு சென்டிமீட்டரில், ட்ரில்லியனில் ட்ரில்லியனில் பில்லியன் பாக அளவே இவை இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது. இவ்வளவு சிறிய வஸ்துக்களுக்குள் எப்படி மனிதன் நுழைய முடியும்?



Wormhole-stephen hawking



இவை எங்கே இருக்கின்றன? க்வாண்டம் மெகானிக்ஸில் Quantum Foam என்ற ஒரு பதம் உண்டு. எந்தப் பொருளுக்குள்ளும் அடிப்படையாக இருக்கும் ஒரு துகள். இதனை எப்படி அளப்பது? மனிதர்களால் அளக்கக்கூடிய அளவைகளில் இதுவரை இருப்பதிலேயே சிறிய அளவு ஒன்றை, Planck Length என்று அழைப்பார்கள். இதை எண்ணிக்கையில் சொல்லவேண்டும் என்றால், 0.00000000000000000000000000000000001 என்று அதனைக் குறிக்கலாம் (டெஸிமல் பாயிண்ட்டுக்குப் பின்னர் 34 ஸைஃபர்கள்). எனவே, இத்தனை சிறிய ஒரு வஸ்துவை நாம் wormholeஆக உபயோகிக்க முடியாது. கூடவே, இந்த வார்ம்ஹோல்கள் உருவானவுடனே அழிந்துவிடுபவை.



சரி. எப்படியாவது ஒரு வார்ம்ஹோலைப் பிடித்து, அதனை பலப்பல மடங்குகள் பெரிதாக்கினால், அப்போது மனிதன் அதனுள் செல்ல இயலும். அதேபோல், இப்படிச் செய்வதன்மூலம் நம்மாலேயே சொந்தமாகப் பெரிய வார்ம்ஹோல்களை உருவாக்கலாம். அப்படி நடந்தால்?



பூமியின் அருகே இந்த வார்ம்ஹோலின் ஒரு பகுதி. அதன் மற்றொரு பகுதி, எங்கோ தொலைதூரத்தில், நம்மால் கற்பனையே செய்துபார்க்கமுடியாத விண்வெளியின் மற்றொரு இடத்தில் இருக்கும். எனவே, இதனுள் நுழைந்தால், குறுகிய காலத்தில் அந்த இன்னொரு பகுதிக்குப் போய்விடமுடியும். இதனால் தூரம் என்பது குறுகிவிடுகிறது. மனிதன் விண்வெளியின் பலப்பல இடங்களை ஆராயமுடியும்.



இது, தூரம் என்பதை மனதில்கொண்டு உருவான தியரி. அதுவே, இந்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும், ‘காலம்’ என்ற அளவையால் பிரிக்கப்பட்டால்? அதாவது, வார்ம்ஹோலின் இரு முனைகளுமே பூமியை நோக்கியே குவிக்கப்பட்டால், ஒரு முனையில் நுழைந்து, மற்றொரு முனையின் வழியாக நாம் வெளியேறும்போது பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன்போ பின்போ பூமியை நாம் பார்க்கலாம். இதுதான் விஞ்ஞானத்தின் பார்வையில் காலப்பயணம். ஆனால், இதற்கான சில முன்னேற்பாடுகள் இருக்கின்றன. நாம் பயணிக்கும் தூரம் என்பது ஒரு மணி நேரத்துக்கு ஐந்துகோடி கிலோமீட்டர்களாக இருக்கவேண்டும். அதேசமயம், இதில் உள்ள ஒரு சிக்கல் – இதன்மூலம் நம்மையே கடந்தகாலத்தில் நாம் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அப்போது ஒரு துப்பாக்கியை எடுத்து நாம் நம்மையே சுட்டுவிட்டால் என்ன ஆகும்? இத்தகைய ஒரு சிச்சுவேஷன் தான் paradox. நடக்குமா நடக்காதா என்று சொல்ல இயலாத ஒன்று. உண்மையில் Grandfather Paradox என்பது விஞ்ஞானத்தில் புகழ்பெற்ற ஒன்று. கடந்த காலத்தில் நமது தாத்தாவை பேச்சிலராக சந்தித்து, அவரைக் கொன்றுவிட்டால், தற்காலத்தில் நாம் உயிரோடு இருக்கமுடியுமா?



இதனால்தான் – இப்படிப்பட்ட குழப்படிகள் நேரலாம் என்பதால்தான், காலப்பயணம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் விஞ்ஞானிகளால் சொல்லப்படுகிறது. Cause & Effect என்பது நமக்கெல்லாம் தெரியும். ஒரு செயல் நடந்தபின்னர்தான் அதன் விளைவு நடக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு கால இயந்திரத்தை நாம் கண்டுபிடித்து, நம்மையே கடந்தகாலத்தில் சென்று சுட்டுக்கொண்டால், விளைவு என்பது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே நடந்துவிடுகிறது அல்லவா? இப்படி நடக்கலாமா? இத்தனை கோடி ஆண்டுகளாக இந்த ப்பிரபஞ்சம் எதுவோ ஒரு விதியைப் பின்பற்றித்தான் செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அப்படி ஒரு சம்பவம் நடப்பதை எப்படியாவது பிரபஞ்சம் தடுத்துவிடும் என்பது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து. கூடவே, அப்படி ஒரு வார்ம்ஹோல் உருவாக்கப்பட்டாலும்., இயல்பான ரேடியேஷன் அதனுள் புகுந்து, அந்த வார்ம்ஹோலையே அழித்தும் விடும். இதனால், வார்ம்ஹோல்கள் உருவாக்கப்படும் சாத்தியம் இல்லை.



ஆனால், காலப்பயணம் என்பது முற்றிலும் சாத்தியப்படாத விஷயமும் இல்லை. எப்படி? காலம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே போன்று இல்லை. பூமியில் இருக்கும் காலம், எங்கோ விண்வெளியில் இருக்கும் காலத்தைவிட வேறானது. ஒரு பொருளின் mass – நிறை என்பது அதிகமாக ஆக, அங்கே காலம் மெதுவாக ஆகிறது என்பது ஐன்ஸ்டைன் சொன்னது. இப்போது, மேலே மேற்கோளில் சொல்லப்படும் கருந்துளை என்பதைப் பற்றி யோசித்தால், நமது Milky Way நட்சத்திர மண்டலத்தின் நட்டநடுவே, இருபத்தாறாயிரம் ஒளி வருடங்களுக்கப்பால், மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட னாஙு மில்லியன் சூரியன்களின் நிறையை ஒரு மிகச்சிறிய புள்ளியில் பெற்றிருக்கும் வஸ்து இது. இந்தக் கருந்துளையில்தான் காலம் என்பது குறைகிறது. அதாவது, ஒரு விண்கப்பல் இந்தக் கருந்துளையை சுற்ற ஆரம்பித்தால், காலம் என்பது அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்குப் பாதியாகக் குறைகிறது. இதனால், எவ்வளவு காலம் அந்தக் கப்பல் கருந்துளையை சுற்றுகிறதோ, பூமியின் காலம் அதைப்போல் இரண்டு மடங்காகிவிடும். அவர்கள் பத்து வருடங்கள் சுற்றிவிட்டு பூமிக்கு வந்தால், இங்கே 20 வருடங்கள் முடிந்திருக்கும். இதுதான் காலப்பயணம்.



இதேபோல் இன்னொருவிதமாகவும் காலப்பயணத்தை மேற்கொள்ளலாம். அது- ஒளியின் வேகத்தில் பயணிப்பது. ஒளியின் வேகம் – ஒரு செகண்டுக்கு 186,000 மைல்கள். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, இந்த வேகத்தை மிஞ்சவே முடியாது. அது சாத்தியமற்றது. ஆனால், இந்த வேகத்துக்கு அருகே – இதில் 99.99% அளவு வேகத்தை ஒரு விண்கப்பல் அடைந்தால், அப்போது காலப்பயணம் சாத்தியம். அப்படி மட்டும் நடந்தால், இந்த வேகத்தில் பயணிக்கும் விண்கப்பலில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் (பிரம்மாவின் ஒரு நாள் என்பதற்கு ஹிந்து மதம் கொடுத்திருக்கும் கணக்குகளையும் அப்படியே ஒருமுறை இங்கே பார்த்துவிடுங்கள்). இப்படி மட்டும் நடந்தால், நமது நட்சத்திர மண்டலமான மில்க்கி வேயின் எல்லையை பூமியில் இருந்து எட்டிப்பிடிக்க வெறும் 80 வருடங்கள்தான் ஆகும். மட்டுமில்லாமல், பூமிக்கு நாம் திரும்பிவரும்போது கணக்கிலடங்கா வருடங்கள் கழிந்திருக்கும். இதுதான் ரிலேட்டிவிடி தியரி.




இப்போது, இதுவரை நாம் பார்த்தவற்றில் முக்கியமான விஷயங்களான காலப்பயணம், கருந்துளையை விண்கலம் சுற்றுவது, Wormhole ஆகியவற்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இணையத்தில் லீக் செய்யப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் திரைக்கதையைப் படித்தால், இந்த மூன்றும் அந்தப் படத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று தெரிகிறது. இந்தத் திரைக்கதை உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால், படிக்கப்படிக்க அதில் நோலன் சகோதரர்களின் முத்திரை நன்றாகவே தெரிகிறது. இந்தத் திரைக்கதைக்கும் Inception திரைக்கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.



திரைக்கதையின்படி, வார்ம்ஹோல் ஒன்றுதான் ஒட்டுமொத்தத் திரைக்கதையிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நாம் மேலே பார்த்த காலப்பயணம் இதில் இருக்கிறது. அதாவது, ஒரு கருந்துளையை சுற்றும் விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது எக்கச்சக்கமான வருடங்கள் கழிந்திருப்பது. கூடவே, மெலிதான காதல் ஒன்றும் இதில் இருக்கிறது. திரைக்கதையின் இரண்டாம் பகுதி படுவேகமாக செல்கிறது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக. படத்தின் முதல் டீஸரைப் பார்த்தாலும், அதற்கும் இந்தத் திரைக்கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் இணையத்தில், இந்தத் திரைக்கதையை மாற்றித்தான் நோலன் படமாக எடுத்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. படத்தை எங்கெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கும், திரைக்கதையில் வரும் லொகேஷன்களுக்கும் தொடர்பு இருக்கிறது.



ஒட்டுமொத்தமாக இந்தத் திரைக்கதையைப் படித்துவிட்டுப் பார்த்தால், சென்ற ஆண்டு வெளிவந்த Gravity படத்தைப் போல, இந்த ஆண்டின் இறுதியில் இண்டர்ஸ்டெல்லார் இருக்கப்போவது உறுதி. க்ராவிடி, இண்டர்ஸ்டெல்லருக்கான ஒரு ட்ரெய்லராக அமையும் என்று தோன்றுகிறது.



விண்வெளி என்ற புதிர் இன்னும் விஞ்ஞானிகளின் மனதை ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக: விண்வெளியின் எல்லை எது? அந்த எல்லைக்கப்பால் வேறொரு விண்வெளி இருக்கிறதா? இதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்தறியவேண்டும் என்றால் வார்ம்ஹோல்கள் அவசியம் தேவை. இந்தக் கேள்விக்கே பதில் இந்தத் திரைக்கதையில் இருக்கிறது. கூடவே, நிலவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் சென்றதே ஒரு கட்டுக்கதை என்றும் திரைக்கதையில் வருகிறது. பல கற்பனைக்கெட்டாத பிரம்மாண்டங்கள் (கான்ஸெப்ட்களாக) இந்தத் திரைக்கதையில் வருகின்றன. இதனால்தான் இந்தத் திரைக்கதை (இதேபோன்று எடுக்கப்பட்டிருந்தால்) அனைவருக்கும் பிடிக்கும் என்பது என் கருத்து.



பொதுவாக விண்வெளிப்பயணத்தைப் பற்றிய படங்கள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரேபோன்ற கான்ஸெப்ட்களே இருக்கும். உதாரணமாக, 2012ல் வெளிவந்த Prometheus படத்தை எடுத்துக்கொண்டால், வேற்று நட்சத்திரம் ஒன்றுக்குச் செல்லும் சில பயணிகள் என்பதுதான் அதன் கரு. அதில் உபயோகப்படுத்தப்பட்ட கான்ஸெப்ட்டின் பெயர் – Stasis. விண்கலத்தின் crew, தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு காலத்தைக் கடப்பதே இந்த ஸ்டாஸிஸ். அந்தப் படத்தில் ஒரு ஆண்ட்ராய்ட் ரோபோ வருகிறது. அதேபோல் இண்டெர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் ரோபோக்கள் வருகின்றன. ஆனால் ப்ராமிதியஸ் போன்ற திராபையாக இது இல்லை. முதல் பகுதி மிகவும் மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி அட்டகாசமான வேகத்தில் சென்றது. இந்தத் திரைக்கதையைப் படித்தபோது, Event Horizon படம் நினைவு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் அது ஒன்று. ஈவெண்ட் ஹொரைஸன் படத்திலும் வார்ம்ஹோல் வருகிறது. ஆனால் அந்தப் படத்தில், செயற்கையான கருந்துளையை உருவாக்கி, அதன்மூலம் ஒரு வார்ம்ஹோலை உருவாக்குவது பற்றி இருக்கும். இதன்மூலம் அந்த விண்கலம், விண்வெளியின் இன்னொரு எல்லைக்குச் சென்றுவிடும். அங்கு இருப்பது – நரகம். மிகவும் வித்தியாசமான கற்பனையில் எடுக்கப்பட்ட படம் அது. ஆனால், சரியாக ஓடவில்லை. கிட்டத்தட்ட இண்டர்ஸ்டெல்லார் மற்றும் ஈவண்ட் ஹொரைஸன் படங்களின் கரு ஒன்றுதான். ஆனால், இண்டர்ஸ்டெல்லார், நோலன் சகோதரர்களால் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கிறது. நோலன் சகோதரர்களின் முத்திரையான முன்னும் பின்னும் திரைக்கதையில் லிங்க் செய்வது இதில் இருக்கிறது. அப்படி இணைக்கப்படுபவைதான் திரைக்கதையின் ட்விஸ்ட்களில் ஒன்று.



இதேபோல், இந்த வார்ம்ஹோல் கான்ஸெப்ட், 2006ல் வெளிவந்த Déjà Vu படத்திலும் லேசாக உபயோகிக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் வரும் Snow white கருவியின் மூலம், கதாநாயகன் கடந்தகாலத்துக்குச் செல்வது (மேலே நாம் பார்த்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும் பூமியில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது உதாரணம்). பஸிஃபிக் ரிம் படத்திலும் இப்படி ஒரு வார்ம்ஹோல் கடலின் அடியில் இருக்கும்.



பொறுத்துப் பார்ப்போம். இன்னும் ஒன்பதே மாதங்கள்தான். வேறு ட்ரெய்லர்கள் வரட்டும். அப்போது இந்தத் திரைக்கதையின் நம்பகத்தன்மையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த கானோளிகளையும் பாருங்கள் ....







http://edhugai.blogspot.in/2014/02/stephen-hawking.html

Friday, 7 February 2014


'என் பையனைப் பத்திக் கவலையில்லீங்க... இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கிறான். கேம்பஸ்ல செலக்ட் ஆகி ஏதாவதொரு சாஃப்ட்வேர் கம்பெனியில சேர்ந்து, கை நிறைய சம்பாதிப்பான். சரி, உங்க பையன் எந்த குரூப்?’ ஏதோ லெதர் டெக்னாலஜியாம்!’ - இதுதான் அந்த அப்பாவித் தந்தையின் பதில். எந்த இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்தாலும், அது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்குத்தான் எனும் எண்ணம் நம் எல்லாருக்கும் வந்துவிட்டது. ''உலகின் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கு ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர், தன்னை ஐ.ஐ.டி மாணவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்வார். தமிழகத்தின் மிகச் சிறந்த மாணவர்கள் கூட, அதிகபட்சமாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குள்ளேயே, தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொள்கின்றனர். உலகின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ..ஐ.டி பற்றிய விழிப்பு உணர்வு இங்கு மிக மிகக் குறைவு. இதனால், நஷ்டம் நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்தான்!



உலகின் அத்தனை முன்னணி நிறுவனங்களும் இங்கே கடை பரப்பி வைத்து காத்திருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களைத் தவிர எலெக்ட்ரிக்கல், மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷன், கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன'.

IIT  (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி)

ஐ.ஐ.டி சென்னை, மும்பை, டெல்லி, காரக்பூர் (கொல்கத்தா) உட்பட ஏழு இடங்களில் உள்ளது. மேலும், புதிதாக ஒன்பது இடங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. பி.இ / பி.டெக் / பி.ஆர்க் என ஆரம்பித்து போஸ்ட் டாக்ட்ரேட் வரையில், தொழில்நுட்பம் சம்பந்தமான அத்தனை படிப்புகளுக்கும் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி.IIT - JEE, JMET, GATE  என படிப்புகளுக்கு ஏற்றவாறு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும். ஐ.ஐ.டி என்பது ஒரு இரும்புக்கோட்டை என்ற மாயை பலரது மனதில் பதிந்துவிட்டது. ஐ.ஐ.டியில் சேர்வது அவ்வளவு கடினமான காரியமும் அல்ல. அதே சமயம், சுலபமான விஷயமும் அல்ல! குறைந்தபட்சம் எட்டாவது படிக்கும் போதிலிருந்தே தங்களை மாணவர்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மாணவர்கள் அனைவருக்கும் ஐ.ஐ.டி பற்றி ஒரு புரிதல் வரும்போது, தமிழகத்தின் வளர்ச்சியில் ஆச்சரியத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

CIPET  (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜி)

சிப்பெட், இந்தியாவில் பதினைந்து இடங்களில் உள்ள கல்வி நிறுவனம். சென்னையில் இருப்பதுகூட, நம்மில் பலருக்குத் தெரியாது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இந்த நிறுவனம், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறையின் கீழ் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் தான் பரம்பொருள். ஆட்டோமொபைல் துறையிலும் பிளாஸ்டிக்கின் தேவை இன்றியமையாதது. டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, யு.ஜி. பி.ஜி. பி.எச்டி. என பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் 'அ முதல் ஃ வரை’ கற்றுத் தரும் நிறுவனம் இது.இதைத் தவிர்த்து, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளும், அப்கிரேடேஷன் படிப்புகளும் இங்கு ஏராளமாக உள்ளன. இன்ஜினீயரிங் பின்புலம் இல்லாதவர்கள்கூட பி.எஸ்சி கெமிஸ்டிரி டிகிரி முடித்திருந்தால், அதற்கேற்ற படிப்புகளில் இங்கு சேர முடியும். பி.எஸ்சி முடித்தவர்களுக்கு 'பிஜி டிப்ளமோ இன் பிளாஸ்டிக் பிராஸசிங் அண்டு டெஸ்டிங்’ (PGD-PPT)  என்ற ஒன்றரை வருடப் படிப்பு இருக்கிறது.

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு 'போஸ்ட் டிப்ளமோ இன் பிளாஸ்டிங் மோல்டு டிசைன்’ என்ற ஒன்றரை வருடப் படிப்பை உருவாக்கியுள்ளனர். இதைத் தவிர, 'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி’ (DPMT),'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி’ (DPT) போன்ற படிப்புகளும் உள்ளன. யிணிணி JEE (Joint Entrance Exam) நுழைவுத் தேர்வு எழுதியே இக்கல்லூரியில் சேர முடியும். ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பங்கள் தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.cipet.gov.in என்ற வலைதளத்தைப் பார்வையிடவும்.

CITD (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டூல் டிசைனிங்)

டூலிங் என்ற துறை பற்றி இங்கு விபரமறிந்தவர்கள் மிகச் சொற்பம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்பூன், டம்ளரில் இருந்து கார் பானெட் வரை டூலிங்தான் எல்லாமே. இது டையிங் (Dyeing)  மோல்டிங் (Moulding)  என்றும் அழைக்கப்படும். டூலிங் படித்தவர்களுக்கு உலகம் முழுவதிலும் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள CITD இந்த டூல் டிசைனிங் படிப்புக்கான ஒரு முக்கிய நிறுவனம்.மூன்று வாரம் முதல் இரண்டு மாதம் வரையிலான காலத்தில் கற்றுத் தரக்கூடிய, இருபத்தைந்து குறுகிய கால படிப்புகளையும் இவர்கள் வழங்குகின்றனர். CAD / CAM, ஆட்டோமேஷன், VLSI - Very Large Scale Integration, Microcontrollers  எனப் பல தளங்களில் இந்த படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. பி.இ. /பி.டெக் மாணவர்களும், டிப்ளமோ மாணவர்களும் இதில் சேரலாம். ஏப்ரல் முதல் ஜூலை வரை, டிசம்பரில் இருந்து ஜனவரி வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு புது பேட்ச் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கான கல்விக் கட்டணம் ரூ.3,500 முதல் 10,500 வரை. தேர்ந்தெடுக்கும் கோர்ஸுக்கு ஏற்ப மாறுபடும்.இனி வரும் காலங்களில் வெறும் பி.இ பட்டம் மட்டும் உதவாது. இது மாதிரியான சிறப்புக் கல்விதான் மற்றவரிடம் இருந்து உங்களை முன்னிலைப்படுத்தும். மேலும் விபரங்களுக்கு www.citdindia.org  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

NTTF (நெட்டூர் டெக்னிக்கல் டிரெய்னிங் ஃபவுண்டேசன்)

என்.டி.டி.எஃப் வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல, இது தொழிற்சாலையும்கூட! இந்தியாவில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட, தங்கள் வேலைகளை இவர்களிடம்தான் அவுட்சோர்ஸ் முறையில் அளிக்கின்றனர். அங்கே தயாரிப்பு வேலைகளைச் செய்வதெல்லாம் இதன் மாணவர்களே! அவர்களின் அந்த அனுபவம், படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு கை மேல் வேலையைக் கொண்டு வந்து சேர்க்கும். இந்தியா முழுவதும் பத்தொன்பது மையங்களில் செயல்படும் இந்நிறுவனம், தமிழகத்தில் வேலூர், தூத்துக்குடி மற்றும் கோவையில் உள்ளன.இங்கு டிப்ளமா, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, பிஜி தவிர்த்து, சான்றிதழ் படிப்புகளும், குறுகிய காலப் படிப்புகளும், தொலை தூரப் படிப்புகளும் உள்ளன.பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான படிப்புகளும் இங்கு உண்டு. பள்ளித் தேர்வு மதிப்பெண்களுடன் NTTF நடத்தும் தனி நுழைவுத் தேர்விலும் தேர்ச்சியடைய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.nttftrg.com என்ற வலைதள முகவரியில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். டிசைன் சம்பந்தமான படிப்புகளுக்கு இந்தியாவில் அதிகமான அளவில் கல்லூரிகள் இல்லாதது வருத்தப்படக்கூடிய விஷயம். அப்படியிருக்கும் ஒரு சில கல்லூரிகளில்கூட ஆட்டோமொபைல் டிசைன் படிப்பு கிடையாது. இன்டஸ்ட்ரியல் டிசைன் கோர்ஸ்கள் தான் உள்ளன. டிசைன் படிப்புகளுக்கும் ஐ.ஐ.டிதான் பெஸ்ட். M.Des (Master of Design)  படிக்க (CEED-Common Entrance Exam for Design)  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதுகலை படிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் உண்டு.

NID (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்)

ஆமதாபாத்தில் உள்ள இது ஒரு மிக முக்கியமான நிறுவனம். ப்ளஸ் டூ மாணவர்களுக்கு நான்கரை வருட டிப்ளமோ படிப்பும், டிகிரி முடித்தவர்களுக்கு பி.ஜி டிப்ளமோவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் எந்தப் பல்கலைக் கழகத்தோடும் சேராத ஒரு தன்னாட்சி அமைப்பு. அதனாலேயே இங்கு பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மட்டும் கொடுக்கப்படுகிறது.ஜி.டி.பி.டி. (GDPD - Graduate Diploma Programme in Design)பி.ஜி.டி.பி.டி.(PGDPD- Post graduate diploma in Design) இன்டஸ்ட்ரியஸ் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என பல பிரிவுகளில் இந்த டிப்ளமோ வழங்கப்படுகிறது. இந்த வருட சேர்க்கைக்கான காலம் முடிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலேயே சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பமாகிவிடும். மேலும் விபரங்களுக்கு ஷ்ஷ்ஷ்.ஸீவீபீ.மீபீu என்ற வலைதளத்தைக் காணவும்.ஐ.ஐ.டி. என்.ஐ.டி. தவிர்த்து டிசைனிங் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு வெளிநாடு செல்வது புத்திசாலித்தனமான செயல். ஐரோப்பாவில் சில நாடுகளிலும், கனடாவிலும் கல்லூரிகள் அதிகம். ஆனால், மக்கள் தொகை குறைவு. எனவே, திறமையான மாணவர்களை முழுவதுமாக ஸ்பான்ஸர் செய்து படிக்க வைக்க பல கல்லூரிகள் உள்ளன. 

http://edhugai.blogspot.in/2014/02/blog-post_7.html

Wednesday, 29 January 2014


ஓர் சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் இரவில் 4 முதல் 6, ஆகவே ஒரு வருடத்தில் 1.460 முதல் 2.190 கனவுகளை காண்கிறான். அதிலும் ஒரு கனவு 5 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும். இப்போ நீங்கள் யோசிக்கலாம் இது என்னடா… காலையில் எழும்பும் போது ஒரு கனவே நினைவில் இல்லையாம் அப்படி என்றால் எப்படி 6 கனவுகள் காண்கிறோம் என்று. 
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இது தான்: நீங்கள் 95% முதல் 99% ஆகிய அனைத்து கனவுகளையும் உடனடியாக மறந்து விடுவீர்கள்! ஏன் என்றால், நீங்கள் காணும் எல்லாக் கனவுகளுமே உங்களுக்கு சுவாரசியமாக இருப்பது இல்லை! ஆகவே அவை அனைத்துமே மறந்து விடுகின்றீர்கள். 



மேலும் பார்ப்போம்… நீங்கள் கனவுகளில் காணும் அடையாளம் தெரியாத நபர்கள் கூட உண்மையில் நீங்கள் எப்போதாவது சந்தித்த ஒருவராகத் தான் இருக்கும். அவர் பக்கத்து ஊர் McDonald’s இல் வேலை செய்யும் ஒருவராக அல்லது தெருவில் தற்செயலாக பார்த்த ஒருவராகத் தான் இருப்பார். கற்பனையிலேயே ஒரு புது முகத்தை எமது மூளை தயாரிப்பதில்லை. எமது வாழ்நாளில் நாம் பார்த்த விஷயங்களை வைத்துத்தான் எமது மூளை கனவுகளை உருவாக்கின்றது. 

சரி, கனவில் நடப்பதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்கமுடியும் என்றால் நல்லா இருக்கும் அல்லவா? உண்மை சொல்லப்போனால் அது கூட முடியும்! „Lucid Dreaming“ என குறிக்கப்படும் முறையை கற்றுக்கொண்டால் உங்கள் கனவுகளுக்கு நீங்களே கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யாமல், நீங்களே கதாநாயகனாக திரிசா, நயன்தாரா, அசின், தமன்னா என்று எல்லோருடனுமே கனவில் ஒரு திரைப்படம் எடுக்கலாம்… 


இப்போ நீங்கள் மட்டுமே காணக்கூடிய உங்கள் கனவுகளை எதிர்காலத்தில் YouTubeஇல் கூட upload பண்ணலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது. University of California Berkeleyயில் இது தொடர்புடைய ஆராய்ச்சி நடை பெறுகிறது. 

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…? 12 சதவீதமானவர்கள் தமது கனவுகளை Black & White இல் தான் காண்கிறார்கள்… நீங்க என்ன மாதிரி? Color கனவா Black & White கனவா காண்கிறீங்க? 

இந்த அறிவு டோஸ் பிடித்ததா? பிடித்து இருந்தால் ஒரு Like போட்டுவிட்டு Share பண்ணுங்கள்.

Saturday, 25 January 2014

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்! மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.... 



ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…ப வெரி சிம்பிள்! “இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்.... 

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார். வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள்.... 

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள். சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.... 


இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல். முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்... 

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள். செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.... 

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், “எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.... 

இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள்.... 

“கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.... 

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.... 

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும். “அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!...

Wednesday, 22 January 2014

நம்ம இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகினத்தோம் போட்டு கிட்டு இருக்கோம்,இது பற்ரி போன வருஷம் நான் சொன்னேன் 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு, அடுத்து கொஞ்ச நாள்ல சோனி ஜப்பான்ல 2ஜிபி ஸ்பீடு கொடுத்தையும் சொன்னேன், இப்ப லண்டன்ல நம்ம பழைய கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேத்து உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை டெஸ்ட் பண்ணி சக்ஸஸ் ஆக்கிட்டாங்க.

jan 23 - ravi
அதாங்க கிலோபைட் போய் மெகாபிட்போய் ஜிகாபைட்டும் போய் கடைசியில டெராபைட்ல வந்து நிக்கிறோம். அதாவது 1.4 டெராபைட் டெஸ்டிங் சக்ஸஸ் இது 1,83,501 – ஒரு லட்சத்து 83 ஆயிரத்து ஐநூறு= ஒரு மெகாபைட் பெர் செகன்ட் ஸ்பீட் – சும்மா லத்திகா படத்தோட டவுன்லோட்டை தட்டின உடனே டவுன்லோட் கம்ப்ளீட்டட்னு முடிஞ்சிடுற ஸ்பீடு.
இதை நேத்து பிரிட்டிஷ் டெலிகாம் லண்டன் மெயின் டவர்ல இருந்து – ஐபி ஸ்விட்ச் என்னும் இடத்தின் இடைவெளியான 410 கிலோமீட்டர் தூரத்துக்கு டெஸ்ட் பண்ணியிருக்காங்க – ஹைடெஃபினீஷன் படத்தை ஸ்ட்ரீம் பண்ணி டெஸ்ட் பண்ணிருக்காங்க் டெஸ்ட் சக்ஸஸ் – ஆல்காடெல் – லூசன்ட் இதற்க்கான உபகரணங்களை செஞ்சிருக்கு – வெகு சீக்கிரம் ஒரு 50 வருஷத்துக்குள்ள நம்ம இந்தியாவுக்கு ஸ்பீடா வந்திரும்னு நம்புவோம்னு ஒரு பெருமூச்சோட பை பை.
World’s Fastest Internet Test from London – Ipswitch was success yesterday.
*****************************************************************************
The “fastest ever” broadband speeds have been achieved in a test in London, raising hopes of more efficient data transfer via existing infrastructure.Alcatel-Lucent and BT said speeds of 1.4 terabits per second were achieved during their joint test – enough to send 44 uncompressed HD films a second. The test was conducted on a 410km link between the BT Tower in central London and Ipswich. The high speeds were achieved using existing fibre cable technology that has already been installed in much of the UK and other parts of the world. I hope we would able to get this technology in less than 50 years……………….Have a GOOD ONE.
Posted by sundar on 21:14 in    No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search