உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஈஸ்டர் தீவும் ஒன்று .
ஈஸ்டர் தீவா ? அது எங்கே இருக்கிறது ?
பசிபிக் சமுத்திரத்தில் சிலி என்னும் நாட்டிற்கு மேற்கே 2200 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒதுக்கு புறமான தீவாகும் இது. 1722 ஆம் ஆண்டு ஈஸ்டர் திருநாளன்று ஒலாந்தரால் இத்தீவுகண்டுபிடிக்கபட்டது . இதனால் இத்தீவிற்கு ஈஸ்டர் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது.
இத்தீவின் பரப்பு 63 சதுர கி.மீ என்று கணக்கிடப்பட்டுள்ளது. சரி இத்தீவில் அப்படி என்னதான்மர்மம் காணப்படுகிறது ?
இத்தீவில் 887 மனித உருவச்சிலைகள் அமைந்துள்ளது . இவை அனைத்தும் தீவின் மத்தியப்பகுதியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரம் சுமார் 10 முதல் 40 அடி வரைகாணப்படுகிறது. அதிக பட்சம் சிலை ஒன்றின் எடை 5
டன் வரை உள்ளதாகவும் இருக்கிறது.ஒவ்வொரு சிலையும் இடுப்பளவே செதுக்கப்பட்டுள்ளது .
இதனை மனித உருவச் சிலைகளை ஏன் செய்தார்கள் ? அதனை எதற்காக
இங்கே வருசையாகநிற்க வைத்தனர் ? இதற்கான உண்மையான காரணம்
என்ன ?
இதற்கான சரியான விடை இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது தொடர்பாகநிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டும் வருகின்றன . ஆனாலும்
யூகத்தின் அடிப்படையினகணிப்புகளை மட்டுமே அவர்களால் வெளியிட
முடிந்துள்ளன.
இது குறித்து பல தொல்பொருள் ஆய்வாளர்கள் என்ன மாதிரியான
கருத்துக்களைவெளியிட்டுள்ளனர் தெரியுமா ? கி.பி 400 ஆம் ஆண்டில்
போளிநேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் கடலில் காணப்பட்ட மின்னோட்டம்காரணமாக தவறுதலாக இந்த தீவிற்கு வந்துள்ளனர் . அதன் பின்னர்தான்
அவர்களால் இங்கிருந்துசெல்ல முடியவில்லை. எனவே வேறு வழியின்றி
இத்தீவிலே நிரந்தரமாக தங்கிட நேர்ந்தது என்றுகருதுகின்றனர்.
ஈஸ்டர் தீவின் மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக
இருந்திருக்கின்றனர் . அவர்கள்வற்றாளை கிழங்கு என்ற ஒரு வகை
கிழங்கையே உணவாக பயன் படுத்தியுள்ளனர். இதுஅமெரிக்காவில் தான்
காணப்படுகின்றது இது எவ்வாறு இத்தீவிற்கு வந்ததென்று தெரியவில்லை .
ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் ஆண்டு கொண்டிருந்த பொழுது
இத்தீவிற்க்கும் வந்துசேர்ந்தனர் . அப்பொழுது இங்கே வசித்தவர்கள்
அநேகமாக இறந்து விட்டதாக கருதப்படுகின்றது . இதுகுறித்து உண்மைத் தகவல்கள் தெரியவில்லை.
இங்கு காணப்படும் மனிதச் சிலைகள் அனைத்திலும் காதுகள் நீண்டதாக
தெரிகிறது.பாலினேசியர்கள் இடையே இரண்டு குழுக்கள் இருந்தன. ஒரு
குழுவில் இருந்தவர்களின் காதுகள்நீண்டதாகவும், மற்ற குழுவில்
இருந்தவர்களின் காதுகள் சிறியதாகவும் காணப்பட்டன. நீண்டகாதுகளை
உடையவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று அழைத்துக் கொண்டனர்.
அவர்களே ஆட்சியும் செய்தனர் அவர்கள் மற்றவர்களை அடக்கி அடிமையாக நடத்தினர்.
அதிகாரத்தில் உள்ளர்வர்களது உருவங்களை அடிமைகள் சிலைகளாக
செதுக்க கட்டளையிட்டனர்.இதனால் தான் இங்குள்ள அனைத்துச் சிலைகளும் காதுகள் நீண்டதாக உள்ளது என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் எரிமலை அடிவாரத்தில் செதுக்கப்பட்டன என்றும் அவை கயிறு கொண்டு 150 அடிமைகளின் உதவியால் கொண்டுவர
பட்டுள்ளன என்றும்தெரிவிகின்றது. இங்கு கயிறாக ஒரு வகை புற்கள்
பயன்பட்டுள்ளன. இச்சிலைகளை தீவிற்குகொண்டு வர ஒரு மாத காலம் ஆகி இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் வரலாற்றுஆய்வாளர்கள் .
சுருக்கமாக சொல்லப்போனால் இச்சிலைகளை செய்ய அத்தீவில் உள்ள
அனைவரின் உழைப்பும்தேவைப்பட்டிருக்க வேண்டும். இத்தீவில் உள்ள
அனைவரும் சிலை வடிபதையே முக்கியதொழிலாக கொண்டுள்ளனர் என்று தெளிவாக புலப்படுகின்றது.
எதற்காகச் சிலைகளை வடிப்பதை பற்றி மட்டுமே அவர்கள் கவலை
பட்டிருக்க வேண்டும் ? தங்கள் உடல் உழைப்பை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற தங்கள் உணவுத் தேவைகளில் பயன்படுத்தாமல் இதற்காக மட்டுமே ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும் ?
அவர்களுக்கு தலைவராக இருந்தவர் அல்லது தலைமைப் பொறுப்பில்
இருந்தவர்கள், இந்தச் சிலைகளை வடிக்குமாறு கடவுள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி இருக்க வேண்டும் . சிலைகள்வடிக்காமல் போனால் கடவுள் தண்டிப்பார் என்று பயமுருதிருக்க வேண்டும்.
இப்படித்தான் பல்வேறு ஆய்வாலர்கழலும் ஊகங்கள் அடிப்படையிலான
கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். ஆனால் எதற்காக இத்தனை மனித சிலைகளை இத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளன என்றுஇன்று வரை
கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே இருக்கிறது.
தற்பொழுது இத்தீவில் மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் என்று
கூறப்படுகின்றது .மேலும் மர்மம் தொடரும்
0 comments:
Post a Comment