சிவபெருமானுக்கு அவரது துணைவியார் பம்பா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இந்த விருபாக்ஷா ஆலயமாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் இந்த கோயிலில் உள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
பம்பாபதி என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் முக்க மண்டபம் (ரங்க மண்டபம்) என்று அழைக்கப்படும் கருவறை, மூன்று வாயில் அறைகள் மற்றும் தூண்களை கொண்ட ஒரு மண்டபம் போன்றவை காணப்படுகின்றன.விருபாக்ஷா கோயில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இங்கு 9 மற்றும் 11ம் நூற்றாண்டினை சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஆதியில் ஒரு சில சிலைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த கோயில் பின்னாளில் விரிவுபடுத்த பட்ட தாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. ரங்க மண்டபம் எனப்படும் கருவறையானது கிருஷ்ணராய தேவராயரால் 1510ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கு சான்றாக இது விஜயநகர கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு அமைந்துள்ளது. தூண்கள், கோயில் மடைப்பள்ளி, விளக்கு தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹிந்து புராணங்களில் வரும் விலங்குகளின் உருவங்கள் இந்த கோயிலில் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
0 comments:
Post a Comment