பத்மபூஷண், பத்ம விபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திரைப்பட நடிகர், இயக்குநர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் இசைக் கலைஞர் விக்கு வினாயக் ராம், மற்றும் நடனக் கலைஞர் பேகம் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 25 பேர் பத்மபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுளள்ளனர்.
இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகை வித்யா பாலன், நடிகர் பரேஷ் ராவல், இயக்குநர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட 101 நபர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.
பத்மபூஷன் விருது : இயக்குநர் கமல்ஹாசன்
நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு வணக்கம், பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு, முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன்.
அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி இந்த பட்டத்திற்க்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது, நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு. பத்மபூஷன் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மன்மார்ந்த வாழ்த்துக்கள் முக்கியமாக என் நண்பர் வைரமுத்து அவர்களுக்கு.
0 comments:
Post a Comment