Sunday 19 January 2014

ஆங்கிலத்தில் இதனை " Dragon Triangle " என்று கூறுகின்றனர். இக்கடல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு தெற்கே சுமார் 100  கி.மீ தொலைவில் உள்ளது மியாகோ தீவு. இந்தப்பகுதியில் இருப்பது தான் பிசாசுக் கடல் . ஜப்பானிய மொழியில் இதனை " மா நோ உமி " என்று அழைக்கின்றனர்.

சரியாகச் சொல்லப்போனால் பெர்முடா முக்கோணத்தின்  நேராக பூமி உருண்டையின் மறு பக்கத்தில் இருக்கிறது இந்த பிசாசுக்க்கடல் .

பெர்முடா கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள்,விமானங்கள் போன்றவை காணாமல் போவது போலவே இந்த பிசாசுக் கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்களும்,விமானங்களும் மாயமாக மறைந்து போவதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த மர்மமான தொலைதல்கள் பற்றி ஜப்பான் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் 1952 ஆம் ஆண்டிற்கும் 1954 ஆம்ஆண்டிற்கும்  இடைப்பட்ட காலகட்டத்தில் இக்கடல் பகுதி வழியாக ஜப்பானின் ராணுவக் கப்பல்கள் சென்றன.ஆனால் இந்தப் பிரதேசத்திற்குப் பிறகு அவை என்னவாயின அதில் பயணித்த 70௦ பேரின் நிலையம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.



இந்த அதிர்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு ஜப்பான் அரசு 31 விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த விஞ்ஞானிகள் குழு உடனடியாக டிராகன் முக்கோணம் நோக்கி பயணித்தது. ஆனால் இதில் சோகம் என்ன வென்றால் அந்த கப்பலின் நிலையும் என்ன ஆனதென்று தெரியவில்லை. சுதாரித்துக் கொண்ட ஜப்பான் அரசாங்கம் அதனை ஆபத்தான பகுதியாக 
அறிவித்தது.

விஞ்ஞானிகள் ஆய்வின் படி ஜப்பானிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் எரிமலைகள் வெடிப்பதும்,நிலா அதிர்வுகள் ஏற்படுவதும் 
சர்வ சாதாரணமான ஒன்றே.இதே போன்ற நிகழ்வுதான் கடலுக்கடியிலும் எரிமலைகள் வெடிக்கின்றன இதனால் கடலுக்கடியில் நில அதிர்வு 
ஏற்படுகிறது . இதனால் கடல் பரப்பின் மேல்பகுதியில் திடீர் திடீரென்று அலைகள் உருவாகின்றது. அப்பொழுது அந்த வழியாகச் செல்லும் 
கப்பல்கள் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. 



Dragon Triangle பகுதியில் உள்ள சிறு சிறு தீவுகள் கூடத் திடிரென்று மாயமாகி விடுகின்றன. புது புது தீவுகள் முளைக்கவும் செய்கின்றன.ஜப்பான் தேசத்தில் இது பற்றி புராணக் கதைகளும் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிசாசுக் கடல் பகுதியில் eraalamaana டிராகன்கள் இருந்தன என்றும் அவை தற்பொழுது அழிந்து விட்டாலும், அவற்றின் அமானுஷ்ய ஷக்தி இன்னும் இப்பகுதியில் இருப்பதனாலயே இவ்வாறு நிகழ்கின்றது  என்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்று இதுவரை பெர்முடா முக்கோணத்தைப் போலவே, டிராகன் முக்கோணப் பகுதியும் கண்டுபிடிக்கப் படவில்லை.
மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. "மேலும் பல மர்மங்கள் இனி வரும் பகுதியிலும் தொடரும் " 

Posted by sundar on 01:14 in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search